நாங்கள் ஜெயிலில் இருந்தால் இந்த போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என அரசாங்கம் நினைத்தது. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதிமுக வழக்கறிஞர் சேகர் என்பவர் எங்கள் மேல் புகார் கொடுத்துள்ளார். புகாரே காலதாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பொய்யான புகாரில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். தகவலறிந்த நண்பர்கள், சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் கொடுத்த அழுத்தத்தால் வழக்குகள் சாதாரணமாக போடப்பட்டது. வெறும் மூன்று நாட்களில் நாங்கள் வெளியே வந்திருக்கலாம், ஆனால், எங்களை வெளியே விடக்கூடாது என அரசு வழக்கறிஞர் மூலம் அழுத்தம் கொடுத்தார்கள். அதன் விளைவாக 9 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, இப்போது நிபந்தனையின் பேரில் வெறியே வந்துள்ளோம்.